Friday, March 19, 2010

பருவமுடிச்சு...

பவாடைப் பாவையே
பருவ முடிச்சவிழ்க்க வா...
நீ
பார்த்த பார்வையிலே
பளபளத்த கன்னத்தில்
பருக்க்ள படிந்துவிட்டதடி...!
உன்
கண்களுக்குள் காமன்
குடிவந்தானா ?
அவன் விடுத்த அம்புகரில்
என் இதயமெங்கும்
ஓட்டைகள்... !
நீ
யாரிடமோ
தொடுக்கும் சொல்மாலையை
என்
காகித கழுத்திற்கு கவிதையாய்
கட்டி வைத்திருக்கிறேனடி!
உன்
““இடை“ காம உத்தரவால்
என்
இதழ்கள் இலக்கியங்களை தேடி
இளைத்து விட்டிருக்கின்றன...

இனி நீ
மருண்டு
மெல் நடை பார்வையை முறித்து
உன்
ஓட்டு வீட்டிற்குள் ஆமையாய் ஒடுங்காதே...
இது
காதலல்ல காமமென
எனை கலைக்காதே...
என்
பருவமுடிச்சுகள் உன்
பாவாடை நாடாவில்...
பாவாடைப் பாவையே...
பருவமுடிச்சவிழ்க்க வா...

No comments: