Friday, March 19, 2010

காதல் புனிதமானது..

களி காலம் கடந்ததம்மா
கலி காலம் கசக்குதம்மா...
காத்தாடி போலாடி காலம் கடக்கையிலே...
பாத்தாடி கொண்டாடி வந்த காதலே அறியலையே...!
நேற்று நான் அறிந்தேன்
நானும் காதலித்திக்கிறேன்...!
கனிகாலம் கடந்ததும்மா
கலிகாலம் கசக்குதம்மா...!
அந்த
மூன்றெழுத்துக்காரியை முத்தமிட்டதுமில்லை
முகத்தோடு முகம் முகர்ந்ததுமில்லை...
அவள்
கண் கண்டேன்
கணை கொண்டாள்...
கணையாழி கொண்டேன்
கவிதை தந்தாள்...
வட்ட முகம் கண்டேன்
வதிர்க்கெடுத்த அலைமுடி கண்டேன்
விரசமில்லா விரல் கண்டேன்
விகல்பமில்லா வெள்ளை நகம் கண்டேன்
இடைகண்டேன் நடை கண்டேன்
மனதில் மடை கொண்டேன்...




எனை
பல சித்திரை பூக்கள் சுற்று வந்த நேரம்
ஆனால் அவள்
குத்துவிளக்கில் ஏற்றப்பட்ட குறிஞ்சிமலர்
நான்
பள்ளிப்படிப்பு படித்தநேரம்
அவள்
பள்ளியறை அடைய நாட்டமில்லை
பளிங்கு முகம் காண விரும்பினேன்
அவள்
பற்கள் உதிர்க்கும் சொற்களுக்கு
படி தேடி வந்தேன்...
நான்
பல மங்கையர் வண்டுகளுக்கு
மலராக இருந்திருக்கிறேன்...
வண்டாது நான்
மலரை தேடியது அவளிடம்தான்...
வாடாத மலர் அவள்...
தேன் பருகாத வண்டு நான்...
அந்த
மலரின் ஒவ்வொரு இதழுக்கும்
ரீங்காரமாய் இதிகாசம் படைக்கதுடிக்கும் வண்டு...

அவளை பார்க்கும் பொழுது மட்டும்
காம்புழுவின் கணகள் அழிந்து
கலைக்கதிரவன் என் கண்களில் உதயமானான்
மிதிவண்டியின் அந்த ஊர் வந்ததும்
அவள் முக தரிசனத்திற்காக
தெருவில் நின்ற நாட்கள்  நிறைய...
அந்தபுரம் அவள் முகம் கண்டதும்
அகம் மகிழ கண்டேன்...
வாசற்படியில் அமர்ந்து
வானம் இருக்கும்வரை
வாய்வலிக்க பேசியிருக்கிறோம்...
அசல் அன்புக்கு அலைந்த நேரம்
அவரிது மூச்சும் பேச்சும்
என் துக்கத்தை துரத்தியது...
தென்னை மரத்தென்றலில்
தேன்குழைத்து வீசவிட்டு
இதயத்தில் படிய வைத்தது
அவள் இதழின் இதம்...
பனி மாலைச் சாரலின்
பள்ளத்தில் நதிவிட்டு
குளிர் நீரில் அழுத்தி பிழிந்து
காயவைத்து நிலவில்
வீங்க வைத்தது அவள் அருகாமை...

அந்த
சித்திரை நிலவின்
சிலிர்க்கும் நினைவுகளை
சிரத்தையாய் என் நெஞ்சில்
பட்டு மெத்தை போட்டு
மெட்டு போட்டு உறங்கி கொண்டுதான் இருக்கிது
கனி காலம் கடந்ததும்மா
கலி காலம் கசக்குதம்மா
அவள்
அழைப்பிதழ் ஆல்பத்தை
அருகில் அமர்ந்து காண்பித்த போது
என்
ஆத்மா அல்பமாய் அழுதது
பனைமர கரகர ஓலை ஓசையுடன்
புயல் புதிதாய் நெஞ்சில் வீசியது
பாலைவளத்தின் நடுவே
கொடுநீரில் வறுக்கப்பட்டது போல் இருந்தது
பத்துமணி வரை பேசிய
முத்துமணி சொற்கள்
சொந்தம் இல்லாமல் போல்விட்டதே...
என்
காகிதத்திற்கும் கணையாழிக்கும் மட்டும்
கற்பனை கனவாய் மாறி போவதேனோ...
அவள்
நெற்றியில் வந்து விழும்
ஒரு கொடுத்து முடிநது கூட
பத்து பாக்கள் பாடியவன் நானே
இன்று
மற்றொருவனின் சொத்து...
பிஞ்சு விரல்களும்
வெள்ளை நகங்களும்
அழுக்குப்படப்போகிறதே...
அவளைவிட
அழகை ஆயிரம் கண்டிருக்கிறேன்...
அழகில் அமைதியை அங்குதான் பார்த்தேன்
காமம் தான் காதல் என்றவன்
காதலுக்கு துடித்தனே...
காதலுக்கும் காமத்திற்கும் சம்பந்தமில்லை !
காதலுக்கு கல்யாணம் தேவையில்லை
கணம்போதும்
அதன் மனக்கணம் போதும் !

““காதலிக்கிறேன்“ என
இருவரும் சொல்லிக் கொள்ளவில்லை...

காலம்கடந்து
கல்யாணம் கொண்டு
கையில் குழந்தையும் கண்டாள்...
இப்பொழுதும் காதலிக்கிறேன்...

காதலியின் மாமியாரே...
அன்பை மட்டும் அறிந்தவள்...
அழுவதை நினைத்துகூட பார்க்க முடியாது
எனக்காக...
அந்த மூன்றெழுத்துக்காரியை
முத்தமிட்டதுமில்லை...
முகத்தோடு முகம்
முகர்ந்ததுமில்லை...

ஆம்
கனிகாலம் கடந்ததும்மா
கலிகாலம் கசக்குதம்மா...
மார்தட்டி சொல்வேன்
அவள் மார்பழகை ரசிக்கவில்லை
மாசற்ற அமைதியின் அழகை காதலிக்கிறேன்...
மீண்டும் சொல்வேன்
ஊர் கூட்டி சொல்வேன்
உரக்க சொல்வேன்
என்
காதல் புனிதமானது...!

No comments: