Friday, March 19, 2010

பருவமுடிச்சு...

பவாடைப் பாவையே
பருவ முடிச்சவிழ்க்க வா...
நீ
பார்த்த பார்வையிலே
பளபளத்த கன்னத்தில்
பருக்க்ள படிந்துவிட்டதடி...!
உன்
கண்களுக்குள் காமன்
குடிவந்தானா ?
அவன் விடுத்த அம்புகரில்
என் இதயமெங்கும்
ஓட்டைகள்... !
நீ
யாரிடமோ
தொடுக்கும் சொல்மாலையை
என்
காகித கழுத்திற்கு கவிதையாய்
கட்டி வைத்திருக்கிறேனடி!
உன்
““இடை“ காம உத்தரவால்
என்
இதழ்கள் இலக்கியங்களை தேடி
இளைத்து விட்டிருக்கின்றன...

இனி நீ
மருண்டு
மெல் நடை பார்வையை முறித்து
உன்
ஓட்டு வீட்டிற்குள் ஆமையாய் ஒடுங்காதே...
இது
காதலல்ல காமமென
எனை கலைக்காதே...
என்
பருவமுடிச்சுகள் உன்
பாவாடை நாடாவில்...
பாவாடைப் பாவையே...
பருவமுடிச்சவிழ்க்க வா...

காதல் புனிதமானது..

களி காலம் கடந்ததம்மா
கலி காலம் கசக்குதம்மா...
காத்தாடி போலாடி காலம் கடக்கையிலே...
பாத்தாடி கொண்டாடி வந்த காதலே அறியலையே...!
நேற்று நான் அறிந்தேன்
நானும் காதலித்திக்கிறேன்...!
கனிகாலம் கடந்ததும்மா
கலிகாலம் கசக்குதம்மா...!
அந்த
மூன்றெழுத்துக்காரியை முத்தமிட்டதுமில்லை
முகத்தோடு முகம் முகர்ந்ததுமில்லை...
அவள்
கண் கண்டேன்
கணை கொண்டாள்...
கணையாழி கொண்டேன்
கவிதை தந்தாள்...
வட்ட முகம் கண்டேன்
வதிர்க்கெடுத்த அலைமுடி கண்டேன்
விரசமில்லா விரல் கண்டேன்
விகல்பமில்லா வெள்ளை நகம் கண்டேன்
இடைகண்டேன் நடை கண்டேன்
மனதில் மடை கொண்டேன்...

Friday, January 29, 2010

காணாத காதலியே...


வள்ளுவனுக்கும்
வார்த்தைகள் வராதடி...
கம்பனுக்கும்
கவிதைகள் காணாதடி...
உவமைக்கும் உருவம் ஆனவளே
உன்னால் உதிரங்கள உருகுதடி
உனக்கென சில வதிகாரங்கள் பாட
இளவடிகள் இருக்கிறேனே...
அத்தை மகளும் இல்லையடி
அத்தான் என அழைக்க...
                                        --செந்தில்ராஜா

இனியவளே......

இனியவளே
இதயத்தில் ஓர் முத்தம்
இட்டுவிடு...
இறந்து இடுகாட்டிலே
இருந்து விடுகிறேன்...!
உன் நினைவுகளோடு
கல்லறையிலாவது
காதலை காவல் காக்கிறேன்...!
இல்லை என
இதழுரைத்து...
இவ்வுலகில் மீண்டும்
பிணமாய் பிறக்கவைக்காதே... !
                                                  --செந்தில்ராஜா.